நாம் மக்களிடமிருந்து, மக்களுக்காக வந்தவர்கள்!
தமிழ்த்தேசியக் கொள்கையை ஏற்று, 2009ல் தனிமனிதர்களாக இருந்து, 2010ல் கட்சியாகி, எவ்விதத் தத்துவ தடம்பிறழ்வோ, உடன்பாட்டு சறுக்கலோ இன்றி, உறுதியான கொள்கைப்பிடிப்போடு, அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சியை முன்வைத்து, புறக்கணிக்கப்பட்ட தமிழ்தேசிய இனத்தின் ஒற்றைக் குரலாய் ‘நாம் தமிழர் கட்சி’ தனது தனித்துவத்தைப் பதிவு செய்து இருக்கிறது. புள்ளியில் இருந்து தொடங்குவதாக அறிவித்த நாம், எவ்வித சாதி, மத, அதிகார, பணப் பலமும் இல்லாது, கருத்துப் பரப்புரை மூலமாகவே 31 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் மனங்களை வென்றெடுத்து, இன்றைய தமிழ்நாட்டு அரசியல் தளத்தில், மூன்றாவது பெரிய கட்சியாக, புதிய நம்பிக்கைகளோடு நிகரற்ற அரசியல் பேராற்றலாக உருவெடுத்துள்ளோம்.
காலங்காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமை அடைகிற இலட்சியப் பயணத்தில் இடையறாது பயணிக்கிறோம். பணப் பலமும், படைபலமும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு மக்களிடம் வாக்குகளைப் பறிக்கும் சமகாலத் தேர்தல் அரசியல் வரலாற்றில் அவையனைத்தையும் தவிடுபொடியாக்கி, உண்மையும் நேர்மையுமாக மக்கள் பணியாற்றும் எளிய பிள்ளைகளான நம்மை, மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டதையே கடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆயினும், அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்குமான ஒற்றைத் திறவுகோலான ஆட்சி அதிகாரத்தை அடைய நாம் இன்னும் நீண்ட நெடும்பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
இப்பெரும்பயணத்தில், எப்போதும் பொருளாதாரத் தட்டுபாடே நமது செயற்பாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா பேருண்மை.
எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரைக்கான தேர்தல் பணிமனை, மேடை ஏற்பாடு, ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி, ஒலி-ஒளிப் பதிவு, வாகன எரிபொருள், உணவு போன்ற இன்றியமையாச் செலவுகளுக்கு, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
நிதியளிக்க:👉🏻 https://donate.naamtamilar.org/erode-east-by-election.html?t=554345
#Donate4Change_ErodeEast