அறிவிப்பு: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

300

க.எண்: 2022120607

நாள்: 30.12.2022

அறிவிப்பு:

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் 82ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு

(டிச.31 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)

இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச் சென்ற வீரத்தியாகி நமது பாட்டன் விஸ்வநாத தாஸ் அவர்களின் 82ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 31-12-2022 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு