அறிவிப்பு: டிச.30, ஐயா நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் நாட்டு மரங்கள் நடும் விழா

144

க.எண்: 2022120602

நாள்: 29.12.2022

அறிவிப்பு:

டிச.30, இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்
9ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(கட்சித் தலைமை அலுவலகம், சென்னை) மற்றும்

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நாட்டு மரங்கள் நடும் விழா

(முடிச்சூர், திருப்பெரும்புதூர்)

இயற்கை வேளாண் பேரறிஞர் நமது ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக நாளை 30-12-2022 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

அதனையடுத்து, நண்பகல் 12:30 மணியளவில் திருப்பெரும்புதூர் முடிச்சூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சுற்றுச்சூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட உள்ளது.

உயிரினப்பன்மையினை ஊக்குவிக்கக்கூடிய நம்முடைய நாட்டு மரங்களை நட்டு வளர்த்தலே நம்மாழ்வார் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும். எனவே, அதன் முன்னெடுப்பாக நடக்க இருக்கும் இந்நிகழ்வில் அனைத்து நாம் தமிழர் உறவுகளும் பங்கெடுத்து சிறப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : பி.டி.சி. குடியிருப்பு, வரதராஜபுரம், மணிமங்களம் சாலை, முடிச்சூர், திருப்பெரும்புதூர்.

இந்நிகழ்வுகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு