ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! – சீமான் வாழ்த்து

57

‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’ என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர், ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின் அரும்பணியைப் போற்றி வணங்குகிறேன்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று நடைபெறுகிற ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களது அஞ்சல்தலை வெளியிடுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்விற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உறவுகள் அனைவரும் இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈரோடு மேற்கு தொகுதி – இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி நாம் தமிழர் கட்சி – மனு அளித்தல் – கைது நடவடிக்கை