அறிவிப்பு: செப்.17, சங்கத் தமிழிசை விழா – சென்னை, கலைவாணர் அரங்கம்

229

க.எண்: 2022090409
நாள்: 16.09.2022

அறிவிப்பு: கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும்
இசையமைப்பாளர்
ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ‘தமிழோசை’ வழங்கும் சங்கத் தமிழிசை விழா

நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ‘தமிழோசை’ வழங்கும்
சங்கத் தமிழிசை விழா
, நாளை 17-09-2022 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. ‘தமிழோசை’ இசைக்குழுவினரின் பல்வேறு இசை நிகழ்ச்சிகளையடுத்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரையாற்றவிருக்கிறார்.

இம்மாபெரும் இசை நிகழ்ச்சியில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், கலைஞர்களும், இலக்கியவாதிகளும், பண்பாட்டு ஆய்வறிஞர்களும், பொதுமக்களும் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்!

இன்பத் தமிழிசை அள்ளிப் பருக,

இனிய மாலைப் பொழுதில் வருக!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திமனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்! – சீமான் எச்சரிக்கை