அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வாழ்வுரிமை மாநாடு (பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கம்) – சீமான் சிறப்புரை

253

க.எண்: 2022070329

நாள்: 26.07.2022

அறிவிப்பு:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும்
வாழ்வுரிமை மாநாடு
(பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கம்)

சிறப்புரை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்: சேலம்
(ஸ்ரீ வரலட்சுமி மகால்)

நாள்: 06-08-2022, சனிக்கிழமை

நேரம்: மாலை 05 மணியளவில்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் ஆகத்து மாதம் 5,6 மற்றும் 7 ஆகிய நாட்களில் சேலம் மாநகரில் வேளாண் கண்காட்சியும், வேலைவாய்ப்பு முகாமும், பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கமும், வாழ்வுரிமை மாநாடும் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, 06-08-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பனை-தென்னை பாதுகாப்பு கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றவிருக்கின்றார்.

இக்கருத்தரங்கில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி