க.எண்: 2022080374
நாள்: 25.08.2022
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
|
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணரவெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி