அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் 312ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – எழும்பூர்

100

அறிவிப்பு:

வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய
312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 11-07-2022 திங்கட்கிழமையன்று
காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி – இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.

இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி