பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை

31

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் புகழ்வணக்கவுரை

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நாம் தமிழர் கட்சி மற்றும் கக்கன் அவர்களின் அறக்கட்டளை சார்பாக 18-06-2022 சனிக்கிழமையன்று மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மதுரை மேலூர் நகரத்திலுள்ள ஐயா கக்கன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். அடுத்து, தும்பைப்பட்டியில் உள்ள ஐயா கக்கன் அவர்களின் நினைவில்லத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, தும்பைப்பட்டியில் நடைபெற்ற பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தில் புகழ்வணக்க உரையாற்றினார்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி