சுற்றறிக்கை: தருமபுரி நாடளுமன்றத் தொகுதிக் கலந்தாய்வு

77

 

க.எண்: 2022040165

நாள்: 13.04.2022

அறிவிப்பு: தருமபுரி நாடளுமன்றத் தொகுதிக் கலந்தாய்வு

வருகின்ற 16-04-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அமைந்துள்ள முத்துகவுண்டர் மங்கம்மாள் திருமண மண்டபத்தில் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை அவர்களின் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.இராவணன், இராசா அம்மையப்பன், ஜெகதீசப் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்றத் தொகுதி அளவிலான கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

இக்கலந்தாய்வில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து மாவட்டப் பிரிவுகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்

தலைமை நிலையச் செயலாளர்