அறிவிப்பு: ஏப்ரல் 16, சீமான் தலைமையில் கண்ணகிப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – பூம்புகார்

107

க.எண்: 2022030133
நாள்: 22.03.2022

அறிவிப்பு: ஏப்ரல் 16, கண்ணகிப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – பூம்புகார்

அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். “மறம் வீழ்த்தி அறம் காத்த மானத்தமிழ் மறத்தி”, தமிழ்ப்பெரும் அடையாளமகத் திகழும்  கண்ணகிப் பெரும்பாட்டியைக் கொண்டாடும் வகையில், “கண்ணகிப் பெருவிழா” இம்முறை நமது பெரும்பாட்டி பிறந்த ஊராகிய பூம்புகார் மண்ணில் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டு மீட்சிப் பாசறையான வீரத்தமிழர் முன்னணியால் முன்னெடுக்கப்பட இருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வானது வருகின்ற ஏப்ரல் 16, சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிவரை மூன்று அமர்வாக நடக்க இருக்கிறது.

காலை அமர்வில் “பட்டினப்பாலை அரங்கும்“, நண்பகல் அமர்வில் “சிலப்பதிகார அரங்கும்“, மாலையில் பெருவிழா பொதுக்கூட்டமும் நிகழவிருக்கிறது. ஒவ்வொரு அரங்கிலும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் தங்களுடைய கருத்தை முன்வைத்துப் பேச இருக்கிறார்கள். விழாவின் இறுதியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்  விழாப் பேருரை நிகழ்த்தவிருக்கிறார்.

தமிழர் வரலாற்று மீட்பின் மிகமுக்கியப் பணியான  பெரும்பாட்டி கண்ணகிப் பெருவிழா  சிறப்புற  நடைபெற உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் பூம்புகார் மண்ணில் ஒன்று கூடுவோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி