எதிர்வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து நகர்புற உள்ளாட்சி இடங்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட விருப்பமனு அளித்துள்ள உறவுகளின் பெயர் பட்டியலை, திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இர.கோகுல் மற்றும் திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதி நிர்வாகிகள், இன்று 25-01-2022, கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அவர்களிடம் வழங்கினர். விருப்பமனுக்கள் விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படவிருக்கிறது.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி