நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் ஒருங்கிணைந்த சோழ மண்டலக் கலந்தாய்வு – தஞ்சாவூர்

178

13-12-2021 மன்னார்குடி வடுவூர் சாலையில் அமைந்துள்ள நடேசபிள்ளை மகாலில் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த சோழமண்டல கலந்தாய்வுக் கூட்டம் மிக எழுச்சியாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேருரை நிகழ்த்தினார்.

இந்த மகத்தான நிகழ்வில் ஒருங்கிணைந்த சோழமண்டலத்திற்குட்பட்ட‌ புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இப்பகுதியின் மாவட்டச் செயலாளர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முன்னிலையில் எதிர் வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் குறித்த தங்களது கருத்துக்களை, செயல்பாடுகளை விவரித்தார்கள்.

ஒரு மாநாடு போல நடந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மன்னார்குடி நாம் தமிழர் கட்சியினர் திரு. அரவிந்தன் தலைமையிலும்,மாவட்ட செயலாளர் வேத பாலா ஒருங்கிணைப்பிலும் வெகு சிறப்பாக செய்திருந்தார்கள்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தினை கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கல்வியாளர் ஹுமாயூன் கபீர், வழக்கறிஞர் மணி செந்தில், மருத்துவர் சர்வத்கான் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாநில பொறுப்பாளர்கள் பேராவூரணி திலீபன், பேராசிரியர் முனைவர் செந்தில்நாதன், இடும்பாவனம் கார்த்திக், திருமதி காளியம்மாள், மூத்த வழக்கறிஞர் முத்துமாரியப்பன், வழக்கறிஞர் உமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக செல்லன் பறையிசை குழுவினர் பறை முழக்கம் நிகழ்த்த, ஒளிமுகம் தற்காப்புக் கலை குழுவைச் சேர்ந்த மாணவ மாணவியர் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளை மிக எழுச்சியாக நடத்தினர்‌.

முந்தைய செய்திஇது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! – சீமான் சீற்றம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 | விருப்பமனு அளிப்பதற்கான நினைவூட்டல்