மனித உரிமைகள் நாளையொட்டி பல்வேறு தேசிய இனங்களின் ஆளுமைகளுடன் சீமான் பங்கேற்கும் மக்கள் உரிமை ஒன்றுகூடல் 2021 – அமிர்தசரஸ், பஞ்சாப்

253

செய்திக்குறிப்பு: மனித உரிமைகள் நாளையொட்டி பல்வேறு தேசிய இனங்களின் ஆளுமைகளுடன் சீமான் பங்கேற்கும் மக்கள் உரிமை ஒன்றுகூடல் 2021 – அமிர்தசரஸ், பஞ்சாப் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று டிசம்பர் 10, மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த தல் கல்சா அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும் ‘மக்கள் உரிமை ஒன்றுகூடல்’ நடைபெறவிருக்கின்றது. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்றடைந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய ஒன்றிய அரசின் அதிகாரக் குவியல், ஒற்றைமயமாக்கல் கொள்கை, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு, சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமியர், கிறித்துவர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உருவாக்கப்படும் தவறான கருத்துருவாக்கங்கள், தனிமனித உரிமைகள் பறிப்பு மற்றும் மறுக்கப்படும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும், தேசிய இனங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெறவிருக்கிறது.

தல் கல்சா அமைப்பு நடத்தும் மக்கள் உரிமை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து போராடும் மக்கள் மற்றும் தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்க உள்ளார்.

மனித உரிமைகள், சட்ட உரிமைகள் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்வது, மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் ஒட்டுமொத்த மனித உரிமைகள் சீரழிந்து வரும் சூழ்நிலை ஆகியவற்றுடன் நாட்டில் அதிகரித்து வரும் கொடுங்கோன்மை மற்றும் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்ட குரலை எழுப்புவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்வு.

சிஏஏ எதிர்ப்பு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி போராடிய விவசாயிகளை கொடூரமான முறையில் கொலை, நாகா மக்களின் அரசியல் கோரிக்கைகள், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள், 370 சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை முதன்மையாக விவாதிக்கப்படவுள்ளன.

பங்கேற்கும் அமைப்புகள்:

மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம்திரிபுரா மக்கள் முன்னணிதல் கல்சாநாம் தமிழர் கட்சி, பஞ்சாப் (அமைப்பாளர்): ஹர்பால் சிங் சீமாஹர்சரஞ்சித் சிங் தாமிகன்வர்பால் சிங்பரம்ஜித் சிங் மாண்ட் மற்றும் பரம்ஜித் சிங் தாண்டா.

கூட்டமைப்பாளர்கள் மற்றும் கருத்துரையாளர்கள்:

முனைவர் குமார் சஞ்சய் சிங், பேராசிரியர் ஜக்மோகன் சிங், காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், செந்தமிழன் சீமான்.

இந்த நிகழ்வில் பங்கேற்கவிருக்கும் அனைத்துத் தலைவர்களும் காரத்பூரில் உள்ள பொற்கோயில் மற்றும் தேரா பாபா நானக் ஆகியவற்றைப் பார்வையிடுகின்றனர்.

அமைப்பு: தல் கல்சா, பஞ்சாப்

நாள்: 10-12-2021 (வெள்ளிக்கிழமை), மனித உரிமைகள் நாள்.
இடம்: அமிர்தசரஸ்பஞ்சாப்

நிகழ்ச்சி நிரல்:
11.30 முதல் 1.30 வரை: தர்பார் சாஹிப்பொற்கோயிலுக்கு கூட்டுப் பயணம்
1.30 முதல் 3.30 வரை: கருத்துரைகள், தர்பார் சாஹிப்
5.30 முதல் 8.30 வரை: ஒன்றுகூடல்சஞ்சோக் விடுதிஅமிர்தசரஸ்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.