அறிவிப்பு: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாக் கூட்டம் – சேலம்

293

க.எண்: 2021100243
நாள்: 24.10.2021

அறிவிப்பு:
நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகின்றோம். அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற நவம்பர் 01ஆம் தேதி, காலை 10 மணியளவில் சேலம் எருமைப்பாளையம் ஆத்தூர் முதன்மை சாலையில் அமைந்துள்ள முத்தாயம்மாள் கல்யாண மண்டபத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு நாள் பெருவிழாக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

சிறப்புரையாற்றுபவர்கள்
தமிழ்த்திரு. அ.வினோத்,

பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்,

நிறுவனர் / தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி

நிறுவனர் / தலைவர், மருது மக்கள் இயக்கம்

தமிழ்த்திரு. சாகுல் அமீது

நிறுவனர் / தலைவர், இஸ்லாமிய சேவா சங்கம்

தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்

நிறுவனர் / தலைவர், வனவேங்கைகள் கட்சி

தமிழ்த்திரு. அ.வியனரசு

தலைவர், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சி

தமிழ்த்திருமதி. நாச்சியாள் சுகந்தி
சமூகச் செயற்பாட்டாளர்

இப்பெருவிழாக் கூட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்