சுற்றறிக்கை: தமிழின முன்னோர்களின் நினைவைப் போற்றும் சுவரொட்டிகள் ஒட்டுதல் தொடர்பாக

384

க.எண்: 2021090197

நாள்: 06.09.2021

சுற்றறிக்கை: தமிழின முன்னோர்களின் நினைவைப் போற்றும் சுவரொட்டிகள் ஒட்டுதல் தொடர்பாக

தமிழினத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் நிலத்தினை மீட்கவும், காக்கவும் அயராது பாடுபட்ட எண்ணற்ற தமிழ் முன்னோர்களும், ஆளுமைகளும், தலைவர்களும், ஈகியரும் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளனர். அவர்களது வரலாற்றை மீட்டெடுத்து தமிழ்த்தேசிய பேரினத்தின் பெருமைமிகு அடையாளங்கள் என தமிழிளந்தலைமுறைக்கு அடையாளப்படுத்தும் பெரும்பணியைக் கடந்த பத்தாண்டு காலமாக நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முன்னோர்களது நினைவைப் போற்றிடும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிகழ்வுகள் குறித்த சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தலைநகரான சென்னை மாநகர் முழுவதும் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டு, மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. அவையெல்லாம் தமிழக இளைஞர்களிடம் புத்தெழுச்சியையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் திமுக அரசு, சிங்கார சென்னை திட்டம் என்ற பெயரில் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி சுவரொட்டிகள் ஒட்ட முற்றாகத் தடை விதித்துள்ளது.

இத்தகைய திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சிமிகு நெருக்கடிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அடிபணியாது என்பதை உணர்த்தும் வகையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இனி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழின முன்னோர்களின் நினைவைப் போற்றும்விதமாக, அந்தந்த தொகுதிகளின் சார்பாக நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, அதுகுறித்த சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: கட்சி சார்பாக முன்னெடுக்கப்படும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் நினைவுக்கூரப்படும் நாட்கள், அதற்கான சுவரொட்டி வடிவமைப்பு மாதிரிகள் உள்ளிட்ட விவரங்கள் நிகழ்வுகள் நடைபெறும் நாட்களுக்கு முன்னதாக தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிராவிடம் என்றால், எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான்..! – சீமான் சீற்றம்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா