செய்திக்குறிப்பு: தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி
அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் மற்றும் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர், தமிழ்த்தேசிய செயல்வீரர் வழக்கறிஞர் இரா. தேவா ஆகியோரது நினைவைப் போற்றும் விதமாக 21-08-2021 அன்று, காலை 10 மணியளவில் சென்னை, மேற்கு கே. கே. நகரில் அமைந்துள்ள அசோகா பார்க் இன் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமையேற்ற சீமான் அவர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கடல்தீபன் மற்றும் தேவா ஆகியோரது திருவுருவப் படத்திற்கு முன்பு நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம் மட்டும் புகழ் வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சீமான் உரை:
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி