திருவொற்றியூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இன்று சீமான் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்

320

க.எண்: 2021030110
நாள்: 14.03.2021

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | எட்டாம் நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (15-03-2021)

வருகின்ற ஏப்ரல் 06 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

15-03-2021 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்

·       காலை 12.00 மணிக்கு திருவொற்றியூர் தேர்தல் அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

·       மாலை 5.00 மணிக்கு மணலி மீனாட்சி திரையரங்கம் அருகில் துவங்கி

தொடர்ந்து திருவொற்றியூர் 18,20,21,22 ஆகிய வட்டங்களில் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

·       இரவு 8.00 மணிக்கு மணலி திருவள்ளுவர் தெருவில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்.

பரப்புரை நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பேரெழுச்சியோடு பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி