முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்

341

க.எண்: 2021020065
நாள்: 08.02.2021

முக்கிய அறிவிப்பு: பிப்.17, திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர்

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, முப்பாட்டன் முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகப் பெருவிழா வழமைபோல் இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நமது தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் திருமணம் நடைபெற்ற “திருப்போரூர் திருமுருகன் கோவில்” அருகில் வருகின்ற 17-02-2021 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
தலைமையில்
திருமுருகப் பெருவிழாப் பொதுக்கூட்டம்
17-02-2021 புதன்கிழமை, மாலை 04 மணியளவில்

திருப்போரூர் திருமுருகன் கோவில்
செங்கல்பட்டு மாவட்டம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்று முருகனின் பெரும்புகழைப் பேரெழுச்சியோடு கொண்டாடிடப் பேரன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

முனைவர் செந்தில்நாதன் (+91-94422 48351)
வீரத்தமிழர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி – குடிநீர் இணைப்பு கட்டணம் முறைகேடு