சுற்றறிக்கை: நவம்பர் 01  – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக 

262

நாள்: 27.10.2020

சுற்றறிக்கை: நவம்பர் 01  – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக 

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக ஒவ்வொராண்டும் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழர்களாகிய நமது பெருங்கடமை.

அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற நவம்பர் 01 தேதி அன்று தமிழ்நாடு நாளினை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கட்சி உறவுகள் ஒவ்வொரு மாவட்டம், தொகுதி, ஒன்றியம், ஊராட்சி எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள நமது கட்சியின் கொடிக்கம்பங்களிலும், தமிழரின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, நமது கட்சி வெளியிட்ட தமிழ்நாட்டுப் பண் இசைத்து, கட்சி வடிவமைத்து அளித்திருக்கிற தமிழ்நாட்டுக்கொடியை ஏற்றிக் கொடி வணக்கம் செலுத்திட வேண்டும். மேலும், மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கவும், இனத்தின் ஓர்மையைக் கட்டியெழுப்பவும், தமிழர் அறத்தினைக் கொண்டு தமிழ்நாட்டில் தமிழர்களுக்கென்று அரசு நிறுவிடவும் உழைத்திட உறுதியேற்று, தமிழ் நாடெங்கும் பெருமித உணர்வுடன் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பு:

அன்று மாலையில் கொடியை முறைப்படி இறக்கிப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கொடி தேவைப்படும் உறவுகள், கட்சி தலைமை அலுவலகத்தைத்  தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு: பா.வசந்தன் – 9943189552 / 044-43804084

–  தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்
அடுத்த செய்திபண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்