முக்கிய அறிவிப்பு: தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்

97

க.எண்: 202010413
நாள்: 24.10.2020

முக்கிய அறிவிப்பு: அன்பிற்கினிய தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு,
வணக்கம்!

தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் நடத்தப்படும் கட்சி மற்றும் பாசறை நிகழ்வுகளையும், தொகுதி உட்பிரிவுகளின் பொறுப்பாளர்கள் பரிந்துரைப்பு விவரங்களையும் செயற்களத்தில் பதிவு செய்வதைத் துரிதப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரத்திற்குள் தொகுதிக் கலந்தாய்வு நடத்தி, அதில் கடந்த மாதத்தில் பதிவு செய்த அனைத்து நிகழ்வுகளையும் மற்றும் மாதக் கணக்கினையும் உறுப்பினர்களின் முன் சரிபார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

மாத அறிக்கையைச் செயற்களத்தில் இருந்து உருவாக்கிய பிறகு அதனைத் தொகுதி உறுப்பினர்களுக்குப் பகிர வேண்டுமென அறிவுறுத்துகிறேன். 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி