புதிய மேம்பாடுகளுடன் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வச் செயலி [Download App]

2607

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வச் செயலியில் நமது ‘தகவல் தொழில்நுட்பப் பாசறை’  பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

download-naam-tamilar-katchi-official-android-app-get-it-on-google-play

join.naamtamilar.org இணையதளம் மூலமாகச் செயல்பட்டு வந்த உறுப்பினர் சேர்க்கையை மிக எளிதாக இனி அலைபேசியின் மூலமாகவே அனைவரும் செயல்படுத்தலாம். இச்செயலி வழியாகவே படம் எடுத்து உடனடியாக உறுப்பினராக்கலாம். கூடுதலாக வாக்காளர் எண்ணையும் வாக்குச்சாவடி விவரத்தையும் அதில் இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்திய முதற்கட்ட இலக்கான ஒரு வாக்குச்சாவடிக்கு பத்து முகவர்கள்(Every Booth Ten Youth) திட்டத்தைத் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைவாக முடிக்கலாம்.

இனி கட்சிச் செய்திகளை உடனுக்குடன் ‘அலைபேசி செயலி’ மூலம் அறிந்துகொள்ள முடியும். தலைமையில் இருந்து நமது கட்சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.naamtamilar.org யில் பதிவேற்றப்படும் செய்திகள் இச்செயலி மூலமாக உடனடியாக உங்களுக்கு வந்து சேரும். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் உரைகள் மற்றும் கட்சியில் நடைபெரும் முக்கிய நிகழ்வுகளின் நேரலையையும் இனி இச்செயலியிலேயே பார்க்கலாம்.

அதே போலத் தொகுதி நிகழ்வுகளைச் ‘செயலி’ மூலமாகவே அத்தொகுதியின் பொறுப்பாளர்கள் நமது கட்சி இணையதளத்திற்குச் செய்தியாக அனுப்பி அது உடனடியாகப் பதிவேற்றப்படும். இது தானியங்கி என்பதால் இனி எல்லாத் தொகுதி செய்திகளும் எல்லோருக்கும் உடனடியாகப் பதிவேற்றப்படும். அத்தோடு செயலியிலிருந்தே அச்செய்திகளை அனைத்து சமூக ஊடகத்திலும் (Facebook ,Twitter, Instagram etc) பகிரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாகச் செயலியில் செய்திகளை ஏற்றினால் கட்சி இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பதிவேற்றிவிடலாம்.

தொகுதிக்குள் நடைபெறும் நிகழ்வுகளை ஒருங்கிணைக்க அது குறித்த செய்திகளைச் ‘செயலி’ மூலமாகவே அந்தந்த தொகுதி உறுப்பினர்களுக்கு அனுப்பலாம். செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கும் அத்தொகுதியை சார்ந்த எல்லோருக்கும் நிகழ்வின் செய்தி உடனே போய்சேரும்.

இனி தொகுதி உறுப்பினர்களின் தகவல்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாகப் பிரித்துத் ‘தரவு அறிக்கை’ எடுக்க இயலும். தொகுதியின் நேரடி 8 பொறுப்புகளில் உள்ள தலைவர், துணை தலைவர்(2), செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் செயலி மூலம் அனைத்து உறுப்பினர் தகவல்களையும் பார்க்க முடியும் மற்றும் தொகுதி தரவுகளைப் பதிவிறக்கமும் செய்ய முடியும்.

அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஆகியோருக்கு உறுப்பினர் அட்டை கோரிக்கைகளைச் சரிபார்த்து அங்கீகரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக வரும் உறுப்பினர் கோரிக்கைகள் குறித்த செய்திகள், தொகுதிச் செயலாளர்,செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் ஆகியோருக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதைக்கொண்டு புதிய உறுப்பினரைத் தொடர்புகொண்டு பேசி களப்பணிக்கு இணைத்துக்கொள்ளலாம்.

தங்கள் தொகுதிக்கான சமூக வலைதளக் கணக்குகளைத் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் / இணைச் செயலாளர் ஆகியோர் நிர்வகிப்பர். தொகுதி உறுப்பினர்களின் சமூக வலைதளச் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை வழங்குவர். கட்சி பொறுப்பாளர்களுக்குத் தேவையான தேர்தல் தொடர்பான விவரங்களை இணையத்தில் இருந்து எடுப்பதற்குத் செய்தித்தொடர்பாளர்/தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர்கள் உதவுவார்கள்.

கட்சிச் செய்திகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிக்கைகளை, அறிவிப்புகளை உடனுக்குடன் பெற, தொகுதி நிகழ்வுகளை இலகுவாக ஒருங்கிணைக்க/பதிவேற்ற, புதிய உறுப்பினர்களை இணைக்க, நேரலை காண “நாம் தமிழர் கட்சி” செயலியை உடனடியாகப் பதிவிறக்கம் செய்க.

download-naam-tamilar-katchi-official-android-app-get-it-on-google-play

– தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திமே-18 இன எழுச்சி நாள் நினைவேந்தல்
அடுத்த செய்திகொள்கை விளக்க பொது கூட்டம்