அறிவிப்பு: தைப்பூசப் பெருவிழாவையொட்டி திருமுருகன் குடில் அமைத்து வேல் வழிபாடு – மதுரவாயல்

513

அறிவிப்பு: தைப்பூசப் பெருவிழாவையொட்டி திருமுருகன் குடில் அமைத்து வேல் வழிபாடு – மதுரவாயல் | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் மெய்யியல் மீட்சிக்கான பாசறை,”வீரத்தமிழர் முன்னணி”யின் கொள்கை முழக்கத்திற்கேற்ப குறிஞ்சித்திணை தலைவன், நமது முப்பாட்டன் முருகப் பாட்டனின் புகழைப்போற்றும் வகையில் தைப்பூசப் பெருவிழாவை வழமை போல் இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மிக சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

தைப்பூச நாளையொட்டி(08-02-2020) தமிழகம் முழுவதும் நாம் தமிழர் உறவுகள் திருமுருகன் குடில் அமைத்து, முப்பாட்டன் முருகனின் படம் மற்றும் வேல் ஆகியவற்றை வைத்து வணங்கி, தேனுடன் கலந்த திணைமாவு மற்றும் பழங்களைப்‌ பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தைப்பூசத்தில் இருந்து 3 ஆம் நாள் மாலை அவரவர் வாழ்கின்ற பகுதிகளில் முருகன் ஊர்வலம் நடத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாளை 07-02-2020 வெள்ளிக்கிழமை, காலை 09 மணியளவில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தின் முன்புறம் திருமுருகன் குடில் அமைத்து வேல் வழிபாடு நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று முப்பாட்டன் முருகனை வணங்கி தேனுடன் கலந்த திணைமாவு மற்றும் பழங்களைப்‌ பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடவிருக்கிறார். இந்நிகழ்வில் அருகிலுள்ள நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: செந்தமிழன் சீமான் இல்லம், அஷ்டலட்சுமி நகர் 26வது தெரு, ஆலப்பாக்கம் சாலை, மதுரவாயல், சென்னை – 600116

— தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதைப்பூசத் திருநாளை அரசு பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழக முதல்வருடன் சீமான் நேரில் சந்திப்பு – முழு விவரம்