அறிவிப்பு: பொதுக்குழுக் கூட்டம் – 2019 | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14-12-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பி.எல்.பி பேலஸ் (PLP Palace Wedding Hall) திருமண மண்டபத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084