புதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி

100

செய்திக்குறிப்பு: புதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி 17-10-2019 | நாம் தமிழர் கட்சி

அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

 

புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரவினா மதியழகன் அவர்களை ஆதரித்து இன்று 16-10-2019 மாலை 5 மணியளவில் சாரம், ஔவை திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்

Part 1 –

Part 2 –

Part 3 –

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு.கந்தசாமி அவர்களை ஆதரித்து   இன்று 17-10-2019 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மாம்பழப்பட்டு  ,கானை,  கெடார் உள்ளிட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு
அடுத்த செய்திஇசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும்! – சீமான் கண்டனம்