மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த விக்கிரவாண்டி வேட்பாளர் கு,கந்தசாமி

297

செய்திக்குறிப்பு: மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த விக்கிரவாண்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு,கந்தசாமி | நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும்  வேட்பாளர் கு.கந்தசாமி அவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று மாட்டுவண்டியில்  ஊர்வலமாகச் சென்று விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அதிகாரி அவர்களிடம் வேட்புமனு வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைபாளர்கள் அன்புத்தென்னரசன், விருகை இராஜேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

வேட்பாளர் பற்றிய சிறுகுறிப்பு:

கு.கந்தசாமி (வயது 36) விவசாயக் குடும்பம், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிகிறார், சமூகச் செயற்பாட்டாளர், 2009ஆம் ஆண்டு முதல் சிகரம் நற்பணி மன்றம் தொடங்கி கிராமப்புற ஏழை எளிய முதியோர்களுக்கு இலவசமாக மனமகிழ் சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச்சென்று முதியவர்களை மகிழ்விப்பது, ஆண்டுதோறும் கண்பார்வை குறைபாடு, சிறுநீரக அறுவைச்சிகிச்சை, பொதுநல மருத்துவ முகாம்கள் நடத்தி  உதவிகள் செய்து வருகிறார், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் வெற்றிபெற பயிற்சி மற்றும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

கடந்த 2018 ஜனவரி மாதம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் “இப்படிக்கு இவர்கள்”,  2019 ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு ஹீரோ” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுவெளியில் நன்றாக அறிமுகம் ஆனவர்.

இவரது சமூகச் செயற்பாடுகளைப் பாராட்டி ஆனந்த விகடன், தினமலர், மண்வாசம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

கட்சியில் தீவிரமான களப்பணியாளர். பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை கட்சி சார்பாக முன்னெடுத்துள்ளார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்தி370, 35 ஏ சிறப்புச்சட்டங்கள் காஷ்மீரிய மக்களுக்கு இந்தியா இட்ட பிச்சையல்ல! அது அவர்களது தார்மீக உரிமை! – டெல்லியில் முழங்கிய சீமான்
அடுத்த செய்திஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் – டெல்லியில் சீக்கிய உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்திய சீமான்