சுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு

192

க.எண்: 2019090151
நாள்: 16.09.2019

சுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தமிழர் பண்பாட்டு மீட்பு பாசறையான வீரத்தமிழர் முன்னணி சார்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 05 ஆம் தேதி (சனிக்கிழமை), தஞ்சை புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் அரசருக்கு அரசன் தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் பெரும்புகழ் போற்றும் நிகழ்வு பேரரசன் பெருவிழாவாக கொண்டாடப்படவிருக்கின்றது.

பேரரசன் பெருவிழாவை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்தும், பெருவிழாச் செலவினங்களைக் பகிர்ந்துகொள்வது குறித்தும் கலந்துரையாட, வருகின்ற 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரம், சி.எஸ்.ஐ. தேவாலயம் எதிரிலுள்ள அன்னை அருள் திருமண அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாநிலக் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது. இக்கலந்தாய்வில் மாநில, மாவட்ட மற்றும் தொகுதிச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பாசறைப் பொறுப்பாளர்களும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பெருவிழாவிற்கு பொருளாதார உதவியாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 10000 ரூபாயும், ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் சார்பாக 25000 ரூபாயும் திரட்டி வழங்குமாறு வேண்டப்படுகிறது.

கலந்தாய்விற்கு வரும் பொறுப்பாளர்கள் தங்களுடைய தொகுதி சார்பாக திரட்டிய நிதியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் முன்னிலையில் பெருவிழா நன்கொடையாக கையளித்து உதவும்படி வேண்டப்படுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஅறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்