சுற்றறிக்கை: இடைத்தேர்தலையொட்டி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நடைபெறவிருந்த மாவட்டக் கலந்தாய்வுகள் தள்ளிவைப்பு

30

க.எண்: 2019090156
நாள்: 28.09.2019

சுற்றறிக்கை: இடைத்தேர்தலையொட்டி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நடைபெறவிருந்த மாவட்டக் கலந்தாய்வுகள் தள்ளிவைப்பு

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், கடலூர், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கான கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி-காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மற்ற மாவட்டங்களுக்கான கலந்தாய்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுகின்றன. கலந்தாய்வுகளுக்கான மாற்று கால அட்டவணை இடைத்தேர்தலுக்குப் பிறகு சுற்றறிக்கை மூலமாக அறிவிக்கப்படும்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திசுற்றறிக்கை: இடைத்தேர்தல் பரப்புரை – தொகுதிவாரியாக இணைந்து களப்பணியாற்றவேண்டிய மாவட்டங்கள்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்