சுற்றறிக்கை: இடைத்தேர்தல் பரப்புரை – தொகுதிவாரியாக இணைந்து களப்பணியாற்றவேண்டிய மாவட்டங்கள்

32

க.எண்: 2019090155

நாள்: 28.09.2019

சுற்றறிக்கை: இடைத்தேர்தல் பரப்புரை – தொகுதிவாரியாக இணைந்து களப்பணியாற்றவேண்டிய மாவட்டங்கள் | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரைக்கான களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, தொகுதிவாரியாக இணைந்து களப்பணியாற்ற வேண்டிய மாவட்டங்கள் பின்வருமாறு;

விக்கிரவாண்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்
நாங்குநேரி கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்
புதுச்சேரி – காமராஜ் நகர் புதுச்சேரி மாநிலம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்

தொகுதிவாரியாக கலந்தாய்வு நடத்தி இடைத்தேர்தல் பரப்புரைக்கான களப்பணிகளுக்கு தயாராகுமாறு நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திவிளைநிலங்கள் வழியே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: இடைத்தேர்தலையொட்டி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நடைபெறவிருந்த மாவட்டக் கலந்தாய்வுகள் தள்ளிவைப்பு