வருந்துகிறோம்!

218

மதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் என்னுயிர்த்தம்பியுமான தமிழ்மணி மனைவி ஜான்சிராணி மரணமுற்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.நலம் பெற்று என் தம்பி மனைவி மீண்டு வந்து விடுவார் என நான் நம்பி இருந்த நிலையில் அவர் மரணமடைந்து விட்டார் என்கிற செய்தி இடி போல என்னைத் தாக்கி இருக்கிறது

தமிழ் தேசிய இன விடுதலை போராட்ட களத்தில் என்னோடு தோளோடு தோளாக நின்று வருகிற தம்பி தமிழ்மணியின் மனைவி ஜான்சிராணி தீக்குளித்து அடைந்த மரணம் என் தம்பி அடைந்திருக்கிற எதனாலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இனமான விடுதலைப் போராட்டக் களங்களில் குடும்பத்தோடு பங்கேற்ற தம்பி தமிழ்மணி இந்த மாபெரும் துயர் நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான வலிமையை காலம் என்கிற மாமருந்து அருளட்டும்.

எதற்கும் தற்கொலை தீர்வாகாது என்று இந்த உலகத்திற்கே உரத்தக்குரலில் சொல்லி வருகிற எங்கள் நாம் தமிழர் குடும்பத்திலேயே இப்படிப்பட்ட துயர் சம்பவம் நடந்திருப்பது ஆழ்ந்த மனவலியை அளிக்கிறது.

தம்பி தமிழ்மணியின் மனைவி ஜான்சிராணியின் மறைவினால் அவரை இழந்து வாடும் அவரது உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வலி மிகுந்த இத்தருணத்தில் என் தம்பி தமிழ்மணியின் துயரத்தில் நிறைந்த வேதனையோடு பங்கேற்று என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திஅறிவிப்பு: ஆகத்து-24, வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சுங்குவார் சத்திரம்(காஞ்சிபுரம்) | மகளிர் பாசறை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்