அறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை

632

அறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக எதிர்வரும் 24-08-2019, சனிக்கிழமை மாலை 04 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கிறது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றுகிறார்.

அவ்வயம் மாநில, மாவட்ட, தொகுதி, வட்ட, நகர, பகுதி, ஒன்றிய, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, வழக்கறிஞர், சுற்றுச்சூழல், மருத்துவர், குருதிக்கொடை, தொழிலாளர் நலச்சங்கம், கையூட்டு-ஊழல் ஒழிப்பு, உழவர், மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: இந்நிகழ்வில் பங்கேற்க தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து வருகைதரும் மகளிருக்கு தங்குமிடம், உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தங்குமிடம்: வாசவி திருமண மண்டபம், சுங்குவார் சத்திரம், வாலாஜாபாத் சாலை
தொடர்புக்கு: 7299484845 / 9123577345 / 9962574477 / 9884222696 / 9944348476 / 8608749392 / 7299484815

“பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை!”
– தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு
அடுத்த செய்திபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா?  – சீமான் கண்டனம்