செய்திக்குறிப்பு: வேலூர் நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி வேட்புமனு தாக்கல் | நாம் தமிழர் கட்சி
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்கள் இன்று 15-07-2019 திங்கட்கிழமை, வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் மற்றும் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர். சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக தமிழ்மறையோன் வள்ளுவப்பெருந்தகையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் விவசாயி
#Vellore4Vivasayi
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி