சுற்றறிக்கை : அன்பிற்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் | தகவல் தொழில் நுட்ப பாசறை

259

சுற்றறிக்கை : அன்பிற்கினிய நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் | தகவல் தொழில் நுட்பப் பாசறை

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் திட்டமான “ஒரு வாக்ககத்திற்குப் பத்து இளைஞர்கள் (Every Booth Ten Youth)” திட்டத்தைச் செயல்படுத்த உங்கள் வாக்காளர் எண்ணை உங்கள் உறுப்பினர் தகவல்களோடு இணைக்க வேண்டுகிறோம்.

https://join.naamtamilar.org/voteridupdate என்ற இணையதள முகவரியில் சென்று அதிலுள்ள படிவத்தில் உங்கள் உறுப்பினர் எண்ணை கொடுத்து உங்கள் பெயரை சரிபார்த்த பின்னர் உங்கள் வாக்காளர் எண்ணை தட்டச்சுச் செய்து பதிவு செய்யலாம் (நீங்கள் அறிந்திருக்கும் பட்சத்தில் உங்களின் பாகம் எண் அல்லது வாக்குச்சாவடி எண்ணையும் பதிவு செய்க)

அவசரகால தேவைகளுக்காக உங்கள் குருதி வகையையும்,  நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கான துளித்திட்டத்தில் இணையவும் விரும்பினால் அந்த தகவல்களையும் நீங்கள் நிரப்பிப் பதிவு செய்யலாம்.

வாக்காளர்/பாகம் எண் தெரியாதவர்கள் https://electoralsearch.in/ என்ற இணையதளச் சேவையைப் பயன்படுத்தித் தகவலை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் உதவிக்கு itadmin@naamtamilar.org என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

– தகவல் தொழில் நுட்பப் பாசறை.
நாம் தமிழர் கட்சி.