எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடர் பரப்புரை நடைபெற்றுவருகிறது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலைமை தேர்தல் குழுப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பண பலம், அதிகார பலம், ஊடக பலம் இவையேதுமின்றி மாற்றத்தை விரும்பும் மக்களை நம்பி நிற்கும் நாம், நமது கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் சின்னத்தையும் அவர்களிடத்தே கொண்டுசேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
எனவே உறவுகள் ஒன்றுகூடி, வீடு வீடாக துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தல், சின்னம் மற்றும் வேட்பாளரின் கைப்பாதகைகள் ஏந்தி வீதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தல், வாகனப் பரப்புரை, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் போன்ற பலவழிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறோம்.
இப்பெரும்பணியில் நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தவறாமல் நேரிடையாக களப்பணியாற்ற வேண்டுமாயின் அன்புடன் அழைக்கிறோம். அவ்வாறு களப்பணியாற்ற ஆம்பூர் வருகைதரும் உறவுகளுக்கு தங்குமிடம், உணவு, குளியல் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுக்காக தேர்தல் களப்பணியாற்ற வருகை தரும் உறவுகள் தொகுதிவாரியாக தங்க வேண்டிய மண்டப பட்டியல் பின்வருமாறு…
*கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி*
கலைச் செல்வி தியாகராஜன் மஹால் (KT Mahal)
_________________________
*ஆம்பூர் சட்டமன்ற தொகுதி*
T P R மஹால்,
பலரோடு, சோலூர்,
ஆம்பூர்
________________________
*வேலூர் சட்டமன்ற தொகுதி*
சுசீலா அம்மாள் வெங்கடேசன் திருமண மண்டபம்,
வி,கே,ஆர் தினகரன் தியேட்டர் அருகில்,
கொசப்பேட்டை வேலூர்,
________________________
*அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி*
எம்.எஸ். மஹால்
அப்துல்லாபுரம் விமான தளம் ரோடு,
இளவம்பாடி,வேலூர்
________________________
*குடியாத்தம் சட்டமன்ற தொகுதி*
பெரிய ஆண்டாள் மடம்,
பேர்ணாம்பட்டு மெயின் ரோடு மெயின் ரோடு,
நெல்லூர்பேட்டை, குடியாத்தம்