மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! – பத்திரிகையாளர் சந்திப்பு

73

செய்திக்குறிப்பு: மறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! – சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பாசறை சார்பாக வழக்கு | நாம் தமிழர் கட்சி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப் போல பெரம்பலூரில் ஆளுங்கட்சி நிவாகிகளால் நடத்தப்பட்டு மறைக்கப்பட்டப் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தகவல்களை உரிய ஆதாரத்துடன் வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் அவர்களின் புகார் மனுவின் மீது பெரம்பலூர் மாவட்டக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த வழக்கறிஞர் அருள் மீதே பொய்யான வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்தும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளைப் போல பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கும் மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தக்கோரியும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை சார்பாக மூத்த வழக்கறிஞர் பாலு அவர்கள் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை 30-04-2019 வழக்குத் தொடுக்கவுள்ள நிலையில் அதுகுறித்தான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று 29-04-2019 மாலை 04 மணியளவில் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தனசேகரன் என்பவர் மீது வழக்கறிஞர் பாசறை சார்பாக டிஜிபி அலவலகத்தில் புகார் மனு
அடுத்த செய்திஅறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப்  பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம்