சுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்

434

சுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்
தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்
மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. இக்கொடுரத் தாக்குதலைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகின்ற 26-04-2019 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 03 மணியளவில் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, வழக்கறிஞர் பாசறை, மருத்துவப் பாசறை, மாணவர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை, தொழிலாளர் நலச்சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மண்புழு கூட நம்மை வாழவைக்கும்;
ஆனால் சாதியும் மதமும் நம்மை வாழவைக்காது; சாகடிக்கும்!
– செந்தமிழன் சீமான்


முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069
அடுத்த செய்திஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்