அறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)

349

அறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)  | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான வேட்பாளர் தேர்வுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் நேற்று 22-03-2019 ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று 23-03-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் வெளியிடப்படவிருக்கிறது.
புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

அவ்வயம் அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு:  வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மண்டலப் பொறுப்பாளர் நியமனம்