மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை

54

செய்தி:   மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி  | நாம் தமிழர் கட்சி

எம்முயிர் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் இன்று 16-02-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில் தொடங்கி தூத்துக்குடி, வி.வி.டி.சாலை சமிக்ஞை அருகில் நடைபெற்றது. மொழிப்போர் ஈகியர் உருவப்படத்திற்கு முன் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று வீரவணக்கவுரையாற்றினார்.

அம்பாசமுத்திரத்தை சேர்ந்த திவ்யபாரதி என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பில் 1145 மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலையை அறிந்து ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை முன்னெடுப்பில் எழுபது ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தங்கை திவ்யபாரதி மற்றும் அவரது தாயாரிடம் வழங்கினார்.

முன்னதாக காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா கொடுரத்தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084