கடந்த 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான அரசியல் பயிற்சி பட்டறைத் தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக மகளிர் பாசறை சார்பாக மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். பெண்கள் சம உரிமைபெற்று சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலைப்பெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகரச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் என்ற நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கிணங்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50% தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தமிழக வீதியெங்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு கட்சிக் கொள்கைகளையும் திட்டங்களையும் கொண்டு சேர்த்திடும் பெரும்பணியில் மகளிர் பாசறை இன்றியமையாப் பங்கு வகிக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு