தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)

55

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி

காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக இருந்த பெ.சாலமோன் (01526267464) அவர்கள், பணிச்சுமை காரணமாகத் தன்னை விடுவிக்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

மேலும், காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இருந்த மு.தியாகேசன் (01858217691) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும்,

இவ்விரு பதவிகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கும்வரை காஞ்சி நடுவண் மாவட்டச் செயலாளர் பா.நாகநாதன் (01066311029) அவர்கள் கூடுதல் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வார் என்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (07-12-2018) அறிவித்துள்ளார்.

எனவே இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி