செய்தி : ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை கடந்த 24-06-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் தங்களை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலியை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
காணொளி:
செய்தியாளர் சந்திப்பு:
இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சே பதவியேற்பில் இந்திய அணுகுமுறை தோல்வி, சீனாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்பட்டது ஜனநாயக படுகொலை எனவும், 20 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதால் ஏற்கனவே ஆண்ட, ஆளுகிற கட்சிகளோடு கூட்டணி சேராமல் வெற்றி-தோல்வி குறித்து கவலைப்படாமல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம். ஒருநாள் நிச்சயம் வெல்வோம்.
#Metoo ஆத்தூர் ராஜலட்சுமி போன்ற சாமானிய பெண்களுக்கு பயன்படவில்லை.
இராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து பேசும் எந்த கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இலங்கையில் தமிழ் தேசிய தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கருத முடியாது எனவும், புதிய அமைப்புகளால் நோக்கம் வலுப்பெற்றிருப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.