அறிவிப்பு: செப். 21, ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்)

128

அறிவிப்பு: செப். 21, ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

சிறைக்கொட்டடியில் கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு அப்பாவி தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் நாளை 21-09-2018, வெள்ளிக்கிழமை, மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

கண்டனவுரை:

  • அ.வினோத், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
  • கே.எம்.செரிப், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
  • ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்
  • மு.களஞ்சியம், தமிழர் நலப் பேரியக்கம்
  • செ.முத்துபாண்டியன், மருது மக்கள் இயக்கம்
  • செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி

அவ்வயம் மாநிலம் முழுமைக்கும் உள்ள நாம் தமிழர் உறவுகளும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று, ‘எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை!’ என உலகிற்குப் பறைசாற்ற அழைக்கிறோம்.

குறிப்பு:  எழுவர் விடுதலைக்கான ஆர்ப்பாட்டத்தைப் பேரெழுச்சியாக நடத்தும் பொருட்டு நாம் தமிழர் கட்சியின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி