8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

226

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சேலம் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் சார்பாக  வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார்  அவர்கள் வழக்கு (WP 16961/2018)  தொடுத்தார்.  அதன் பிறகு சேலம் 8 வழி சாலையால் நேரிடையாக பாதிக்கப்பட்ட நமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் இராவணன் தனது அண்ணன் பி.வி.கிருஷ்ணமூர்த்தி பெயரில் (WP16630/2018) மற்றொரு வழக்கு தொடுத்தார். அதன் பிறகு வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் வழக்கு தொடுத்தார். தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாகவும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி சார்பாகவும் வழக்குகள் பதியப்பட்டன. மேலும் 30க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் / நில உரிமையாளர்கள்  இவ்வழக்கில் இணைந்தனர்.

சேலம் 8 வழிச்சாலைத் தொடர்பான எல்லா நீதிப்பேராணை மனுக்களையும் இணைத்து இன்று 21-08-2018 சேலம் 8 வழிச்சாலைக்கு அரசு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற  நீதியரசர்  உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஐயா வே.பாலு அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் சங்கர் மற்றும் ஜெகன் அவர்களுக்கும் அமர்நாத் உள்ளிட்ட நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை உறவுகளுக்கும், ஆவணங்கள் கொடுத்து உதவிய சேலம் மாவட்ட நாம் தமிழர் உறவுகளுக்கும் நன்றி.

சட்டப்போராட்டம் வெல்லட்டும்!

உறவுகளுக்குப் புரட்சி வாழத்துகள்!

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெங்கொடி நினைவாக-பேருந்து நிலையம்-பராமரிப்பு பணி
அடுத்த செய்திமதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு