அறிவிப்பு: புதிய செயலிகள் வெளியீடு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் | தொழில்நுட்பப் பாசறை

20

அறிவிப்பு: புதிய செயலிகள் வெளியீடு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் | நாம் தமிழர் கட்சி – தொழில்நுட்பப் பாசறை

நாம் தமிழர் கட்சி – தொழில்நுட்பப் பாசறை சார்பாக அறம், சந்தை, வழிகாட்டி, பவளம், உலா என்ற 5 புதிய செயலிகள் தமிழ்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. செயலிகள் வெளியீட்டு நிகழ்வு வருகின்ற 21-05-2018 திங்கட்கிழமையன்று காலை 11 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செயலிகளை வெளியிடுகிறார்கள்.

அவ்வயம் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை சுற்றியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி