காவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை

19

காவிரிப் போராட்டம்: ஐபில் போட்டி மைதானத்திற்குள் காலணி வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 08 பேர் பிணையில் விடுதலை | நாம் தமிழர் கட்சி

கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர். ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று மைதானத்திற்குள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம் (10-04-2018):
1. பிரபாகரன்
2. ஐயனார்
3. பொன்னுவேல்
4. மகேந்திரன்
5. ராஜ்குமார்
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்
8. சுகுமார்
9. ஆல்பர்ட்
10. ஏகாம்பரம்
11. மார்டின்

இதில் 08 பேருக்கு மட்டும் இன்று (19-04-2018) பிணை கிடைத்துள்ளது.

1. பிரபாகரன்
2. பொன்னுவேல்
3. மகேந்திரன்
4. ராஜ்குமார்
5. சுகுமார்
6. ஆல்பர்ட்
7. ஏகாம்பரம்
8. மார்டின்

மேலும் ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட (14-04-2018) ஸ்டாலின் அவர்களுக்கும் இன்று பிணை கிடைத்துள்ளது. பிரதிப் இன்று (19-04-2018) விடுதலையானார். எஞ்சியவர்களைப் பிணையில் எடுக்க நாம் தமிழர் – வழக்கறிஞர் பாசறை அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் அனைவரையும் மீட்போம்.

பிணை கிடைத்துள்ள 09 பேரும் நாளை (20-04-2018) காலை விடுதலையாகிறார்கள். அன்னைக் காவிரிக்காகப் போராடி சிறைச்சென்ற உறவுகளை வரவேற்க நாம்தமிழர் உறவுகள் அனைவரும் புழல் சிறைச்சாலை அருகே கூடுவோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ‘நீட்’ தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு – இரண்டாம் அமர்வில் சீமான் கருத்துரை
அடுத்த செய்திஅறிவிப்பு: ஐபில் போட்டியின்போது காலணி வீசி எதிர்ப்பு – சிறைசென்ற 08 பேர் பிணையில் விடுதலை