அறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டி புறக்கணிப்பு – சீமான் தலைமையில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம்

74

அறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டி புறக்கணிப்பு – சீமான் தலைமையில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக சென்னையில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகள் இருக்கும் என்பதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை சென்னையில் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டபிறகும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து நடத்தும் முனைப்பில் IPL நிர்வாகத்தினர் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வலைகளை உலகறியச் செய்யும்விதமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் IPL கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மாலை 6 மணிக்கு மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது.

நாள்: 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி
இடம்: சென்னை, சேப்பாக்கம் மைதானம் முன்பு

கூடுமிடம்: மாலை 4 மணிக்கு, அண்ணா சிலை அருகில், புதிய தலைமை செயலகம் பின்புறம்

அவ்வயம் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி
அடுத்த செய்திஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைச் சென்னையில் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை