காவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை

46

அறிவிப்பு: காவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை

கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர் இராமநாதபுரம் மாவட்டம் சாரதிராஜா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சுபாகர் ஆகியோர் கடந்த 24-04-2018 அன்று மாலை புனையப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இன்று (28-04-2017) பிணை கிடைத்ததையொட்டி நாளை (29-04-2018) காலை 7 மணியளவில் விடுதலையாகிறார்கள்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ரூபன் மற்றும் வினோத் ஆகியோர் இன்று (28-04-2017) பிணையில் விடுதலையாகினர். இதுவரை கைது செய்யப்பட்ட 40 பேருக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் பிணையில் விடுதலையாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அயராது பாடுபட்ட
நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறைக்கு புரட்சி வாழ்த்துகள்.

அன்னைக் காவிரிக்காகப் போராடி சிறைசென்றவர்களை வரவேற்க நாம் தமிழர் உறவுகள் அனைவரும் நாளை (29-04-2018) காலை 7 மணியளவில் புழல் சிறைச்சாலை வாயிலில் கூடுவோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி