அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)

160

அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி) | நாம் தமிழர் கட்சி

மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று பெருவிழா பேருரையாற்றுகிறார். மேலும் பறையிசை, மள்ளர் கம்பம், கருப்பு நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில்
இடம்: உத்தமபாளையம் (தேரடி), தேனி மாவட்டம்
தொடர்புக்கு: 9442248351 / 9944256064 / 9894522289


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி