அறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு

20

அறிவிப்பு: காவிரி உரிமை மீட்புக் குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகளை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடுவதற்காக இன்று 09-04-2018 (திங்கட்கிழமை) மாலை 4:30 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி