அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 13வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்

52

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 13-12-2017 13வது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக
மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

13வது நாள் 13-12-2017 (புதன்கிழமை) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைத் திட்டவிவரம்:

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்கு சேகரிப்பு மற்றும் வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 41வது வட்டம், எழில் நகர் தீயணைப்பு நிலையம், எம்.ஜி.ஆர் நகர்.

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 41வது வட்டம், எழில் நகர், தொப்பை விநாயகர் கோயில் தெரு
தொடர்புக்கு: ஆனந்த்பாபு: 8608741914 / முருகேசன்: 996229199

திரு.வி.க நகர், எழும்பூர், மதுரவாயல், பூவிருந்தவல்லி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல்களம்: 11-12-2017 11வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்